ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கப் பதக்கம் வென்றது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி ஈரான் அணியை 37-34 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தொடக்கம் முதலே இரு அணிகளும் கடுமையாகப் போராடிய நிலையில், இந்திய வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு முன்னிலை பெற்றனர். இறுதியில் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றனர்.
ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கபடி அணிக்கு தங்கம்
