Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

உலகளவிலான பொருளாதார சூழல் நிச்சயமற்ற நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக தங்கம் விலையும் தினசரி ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த மாதங்களில் கச்சா எண்ணெய் விலை உயர்வானது தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவை நோக்கி சென்றது.

இந்த நிலை இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் சீரடையும் என்று நிபுணர்கள் தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் அமெரிக்கா – ஈரான் இடையே போர் தொடங்கி உள்ளது. இதனால் மீண்டும் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது சரிந்து வந்தது.

நேற்று (ஜூலை 14) தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்த நிலையில், வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்தது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,05,440-க்கும், ஒரு கிராம் ரூ.13,180-க்கும் விற்பனையானது. 1 கிராம் வெள்ளி ரூ.240-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனையானது.

இன்று (ஜூலை 16) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 குறைந்து, ரூ.1,05,200-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.13,150-க்கு விற்பனையாகிறது.

நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்த நிலையில் இன்று அதே விலை குறைந்துள்ளதால் நகைப் பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000-க்கு விற்பனையாகிறது.

2025-ம் ஆண்டு இதே ஜூலை 16-ல் 1 சவரன் தங்கம் ரூ.72,800-க்கும், 1 கிராம் ரூ.9,100-க்கும் விற்பனையானது. 2025 ஜூலை 16-ல் 1 கிராம் வெள்ளி ரூ.124-க்கு விற்பனை.

error: Content is protected !!