Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை உயர்வு….

தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வார தொடக்கத்தில் சரிவில் இருந்த தங்கம் விலை கடந்த 10-ந்தேதி முதல் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. கடந்த 10ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.41,520க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது. அதாவது நேற்று முன் தினம் ஒரு சவரன் ரூ.42,160-க்கு விற்கப்பட்டது. இதேபோல் ஞாயிற்று கிழமையான நேற்றும் அதே விலையே நீடித்தது.

இந்நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.42,600-க்கு விற்கப்படுகிறது.  நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5,270-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ரூ.5,325-க்கு விற்கப்படுகிறது. இதே போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ.69.50-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.69,500-க்கு விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு  ரூ.1,080 உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!