தமிழகத்தில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக குறைந்தது. அதன்படி ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,030-க்கு விற்பனை விற்பனையானது. சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,04,240க்கு விற்பனையானது. தங்கத்தை போல வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை ரூ.1,360 உயர்ந்து சவரன் ரூ.1,05,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,200க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில் பிற்பகல் ரூ.1,360 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு காலையில் ரூ.5 குறைந்த நிலையில் நண்பகலில் ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது.
