Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“சீருடையில் வந்து சரக்கு வாங்கிய ஏட்டு!” – சேலத்தில் வைரலான வீடியோவால் கமிஷனர் அதிரடி ஆக்சன்

சேலத்தில் பணியின்போது சீருடையில் வந்து போலீஸ் ஏட்டு மதுவாங்கும் வீடியோ வைரலானதையடுத்து, அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரே அரசின் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த டாஸ்மாக் கடைக்கு சென்ற ஏட்டு ஒருவர், சீருடையில் சென்று மதுபாட்டில் வாங்கும் வீடியோ, நேற்று சமூக வலைதளத்தில் பரவியது. அந்த வீடியோவில், ரோந்து பைக்கில், சீருடையுடன் செல்லும் போலீஸ் ஏட்டு ஒருவர் கடைக்கு முன்பு சென்று நிற்கிறார். அப்போது கடையிலிருந்து வரும் ஒருவர் கையில் உள்ள மதுபாட்டிலை கொடுத்தவுடன், ஏட்டு அதனை வாங்கி ரோந்து பைக் கவரில் வைத்துக் கொண்டு அங்கிருந்து செல்கிறார்.

இந்த வீடியோ கடையின் மாடியில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று இந்த வீடியோ வைரலானதையடுத்து விசாரணை நடத்த கமிஷனர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டார். விசாரணையில் வீடியோவில் இருந்தது சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் அண்ணாதுரை என்பதும், இவர் அடிக்கடி இதுபோன்று மது வாங்குவதும் தெரியவந்தது. இதனையடுத்து அண்ணாதுரையை மாநகர ஆயுதப்படைக்கு மாற்றி, கமிஷனர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டார்.

error: Content is protected !!