திருச்சி மாநகராட்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக்கழிப்பறையை மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அதிகமான பயணிகள் வந்து பயன்படுத்தும் இந்த பொதுக் கழிப்பிடத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் எனவும், ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
