Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை நிலவரம்: இன்று சவரனுக்கு ரூ. 640 உயர்வு

சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (மே 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய நிலவரம்
நேற்று (மே 01) காலை, தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 14,050 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 400 ரூபாய் சரிவடைந்து 1,12,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 265 ரூபாய்க்கு விற்பனையானது.

நேற்று மாலை, மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து 13,920 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 1,040 ரூபாய் சரிவடைந்து, 1,11,360 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (மே 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி நிலவரம்
வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 270 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

error: Content is protected !!