தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸட் 24) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்து, ரூ.1,20,240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.80 உயர்ந்து ரூ.15,030-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.275-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,75,000-க்கு விற்பனையாகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:
ஆகஸ்ட் 23: 1 கிராம் – ரூ.14,950 1 சவரன் ரூ.1,19,600
ஆகஸ்ட் 22: 1 கிராம் – ரூ.14,950 1 சவரன் ரூ.1,19,600
ஆகஸ்ட் 21: 1 கிராம் – ரூ.14,850 1 சவரன் ரூ.1,18,800
ஆகஸ்ட் 20: 1 கிராம் – ரூ.14,600 1 சவரன் ரூ.1,16,800
ஆகஸ்ட் 19: 1 கிராம் – ரூ.14,400 1 சவரன் ரூ.1,15,200
