Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜாக்கெட்டில் மறைத்து 359 கிராம் தங்கம் கடத்தல்…. திருச்சியில் பெண் குருவி சிக்கினார்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம்  நேற்று இரவு திருச்சி வந்தது.  அதில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் .அப்பொழுது பெண் ஒருவர் தனது ஜாக்கெட்டில் தங்க சங்கிலிகளை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த பெண்ணை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் இருந்து ரூபாய் 27 லட்சத்து 14 ஆயிரத்து 225 மதிப்புள்ள 359.5கிராம் எடை கொண்ட தங்க சங்கிலிகளை பறிமுதல் செய்தனர்

பின்னர் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த பெண்  கோலாலம்பூர்  விமான நிலையத்திற்குள் நுழையும் பொழுது அங்கு இருந்த நபர் ஒருவர் இந்த தங்க சங்கிலிகளை திருச்சியில் கொண்டு போய் கொடுத்து விடுங்கள் எனக் கூறி அதற்காக 5000 ரூபாய் பணம் தருகிறேன் எனக் கூறி அவரை அனுப்பி வைத்தது தெரியவந்தது இது குறித்தும் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!