Skip to content
Home » ரூ.42 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம்…. திருச்சியில் பறிமுதல்

ரூ.42 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம்…. திருச்சியில் பறிமுதல்

  • by Senthil

சார்ஜாவில் இருந்து  திருச்சி வந்த  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில்    வந்த  சில பயணிகளின்நடவடிக்கையில் சந்தேகமடைந்த  வான் நுண்ணறிவு பிரிவு  அதிகாரிகள்  அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண்  பயணியின் ஜீன்ஸ் பேண்ட், உள்ளாடை ஆகியவற்றை சோதித்தபோது,  அதில்  பேஸ்ட்  வடிவில் தங்கம் கடத்தி வந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதில்  683 கிராம் தங்கம் இருந்தது.  அவை 24 காரட் தங்கம். அதன் மதிப்பு ரூ.42 லட்சத்து 69 ஆயிரம். தொடர்ந்து அந்த பயணியிடம் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்  விசாரணை நடத்தி்னர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!