Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாபநாசம் அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… 12 பேர் காயம்

பாபநாசம் அருகே அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய பயணிகள்..

இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் 12-பேர் படுகாயம். காயம் அடைந்தவர்களை மீக்கப்பட்டு குடந்தை அரசு மருத்துவமனையில் அனுமதி..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பேருந்தின் ஓட்டுனர்கள் மற்றும் பேருந்தில் பயண

ம் செய்த 12-பேர் படுகாயம் அடைந்தனர்.

திருச்சியிலிருந்து காரைக்கால் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அதே போல சென்னையிலிருந்து தஞ்சாவூர் நோக்கி அரசு பேருந்து ஒன்றும் சென்று கொண்டிருந்தது.

தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையான பாபநாசம் அருகே பண்டாரவாடை புதுரோடு பகுதியில் வந்து கொண்டிருந்த இரண்டு அரசு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், சென்னையில் இருந்து தஞ்சை நோக்கி வந்த பேருந்து ஓட்டுனர் உட்பட இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த பயணிகள் 12-பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மீட்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து படுகாயமடைந்த 3-பேர் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு 108-ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்..

தகவலறிந்த பாபநாசம் காவல் நிலைய ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையிலானபோலீசார் சம்பவ இடத்திற்கு வருகை புரிந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!