கேரளம் மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பெட்டா அருகே பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் 56 வயது சுப்பிரமணியன், நண்பர் மூலம் 55 வயது பெண்ணுக்கு அறிமுகமாகியுள்ளார். தன்னை வக்கீல் என்றும், மனைவியை பிரிந்து வசிப்பதாகவும் கூறி, அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரிடம் இருந்து 5 பவுன் நகையையும் பெற்றதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
