தவெக கட்சியை சேர்ந்த பிரபல ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகராக நியமனம்..முதலமைச்சருக்கான சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்

யார் இந்த ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் :
ராதன் பண்டிட் வெற்றிவேல், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் பிறந்தவர். பள்ளி, கல்லூரி காலத்தில் கிரிக்கெட் வீரராக விளங்கியவர். 1989 வாக்கில் ஜெயலலிதாவுக்கு ஜோதிடம் கணித்துக் கூறினார். அதன்பிறகு, ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். பின்னர் 1996ல் ஜெயலலிதா தேர்தலில் தோல்வியடைவார் என்றும், சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் கணித்துச் சொன்னவர் ராதன் பண்டிட்.
ராதன் பண்டிட் கணித்த பெரும்பாலானவையும் அப்படியே நடந்ததால் தனிப்பட்ட ஜோதிடராக அவரிடம் ஆலோசனைகளை கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டார் ஜெயலலிதா. அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பின் போதும் தேர்தல் சமயங்களிலும், தன்னிடம் ஆலோசனை பெற்றே ஜெயலலிதா பல விஷயங்களில் செயல்பட்டதாக ராதன் பண்டிட் கூறியுள்ளார். ஜெயலலிதா தனக்கு எதிரான பல வழக்குகளில் தனது ஆலோசனையின்படியே செயல்பட்டதாக ராதன் பண்டிட் கூறியுள்ளார். தனது ஆலோசனையின்படியே ஜெயலலிதா தமது பெயரின் கடைசியில் கூடுதலாக ஒரு A சேர்த்துக்கொண்டார் என்றும், அதன்பிறகு தான் தொடர்ச்சியாக 2 முறை சட்டசபை தேர்தலில் அதிமுக வென்று ஜெயலலிதா 2 முறை முதலமைச்சர் ஆனார் என்றும் கூறியுள்ளார் ராதன் பண்டிட்.ஜெயலலிதாவுக்கு மட்டுமல்லாமல் சசிகலாவுக்கும் ஆஸ்தான ஜோதிடராகத் திகழ்ந்தவர் ராதன் பண்டிட். என்.சசிகலா என்று இருந்ததை வி.கே.சசிகலா என மாற்றிக்கொண்டதற்குப் பின்னணியிலும் இந்த ராதன் பண்டிட் தான் இருக்கிறாராம். சசிகலா குடும்பத்தினருக்கு நெருக்கமன ஜோதிடராகவும் திகழ்ந்து வந்துள்ளார். சசிகலா குடும்பத்தினரின் தொழில் நிறுவனங்கள், குடும்ப விவகாரங்கள் சார்ந்து ஜோதிட ஆலோசனைகளை கூறி வந்தது இவர்தான் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, அவருக்கு மிகவும் நெருக்கமாகியுள்ளார் ராதன் பண்டிட் வெற்றிவேல். 2026ல் விஜய் முதலமைச்சர் ஆவார் என சில யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்திருந்தார் ராதன் பண்டிட் வெற்றிவேல். மேலும், விஜய்யின் பிரச்சார நிகழ்ச்சிகளுக்கு தேதியை குறித்துக் கொடுப்பது இவர்தான்.
இதனால் இவர் எக்ஸ் தளத்தில் தொடர்ந்து பேசப்பட்டு வந்தவர். விஜய் கட்சி துவங்கும் முன்பே அவர் கணித்த விஷயம் பற்றி விவாதிக்கப்பட்டதால் ரதன் பண்டிட் டிரெண்டானார். ரதன் பண்டிட் விஜய் பற்றி மட்டும் அல்ல அஜித் குமார் பற்றியும் ஜாதகத்தை வைத்து கணித்திருந்தார். இதுவரை தமிழகத்தை ஆட்சி செய்த முதல்வர்களின் ஜாதகத்தை விட அஜித் குமார் ஜாதகம் சிறப்பாக இருக்கிறது. அவர் அரசியலுக்கு வர விரும்ப மாட்டார். ஆனால் வந்தால் நிச்சயம் முதல்வர் ஆகும் யோகம் அஜித்துக்கு இருக்கிறது என்று கணித்தார் ரதன் பண்டிட்.
