Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரம்

கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறப்பு நாளன்று வழங்க பாடப்புத்தகங்கள், சீருடைகள் அனுப்பும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டத்தில் 140 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு

பள்ளி திறக்கும் நாளன்றே பாடப் புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் வழங்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை அங்கிருந்து வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் மும்முரமாக

நடைபெற்று வருகிறது.

கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் இப்பணிகள் நாளை மாலைக்குள் அனுப்பி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தெரிவித்தனர்

error: Content is protected !!