Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல்

தவெக அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல்

தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு 5 நாட்களில் ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்திருக்கிறார். மொத்தம் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. பின்னர் பட்ஜெட் மீதான விவாதம், துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றன. கடந்த செப்டம்பர் 8ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களும் ஆளுநர் அர்லேகரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதைப் பரிசீலித்த ஆளுநர் அர்லேகர், 6 மசோதாக்களுக்கு 4 நாட்களிலும், மேலும் 5 மசோதாக்களுக்கு 5 நாட்களிலும் என மொத்தம் 12 மசோதாக்களுக்கு உடனடி ஒப்புதல் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார்.

இதில் எம்எல்ஏ-க்களுக்கு கார் வழங்குவது தொடர்பான மசோதாக்கள் உள்பட 12 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு நகர் ஊரமைப்பு திருத்தச் சட்டம் 2026, தமிழ்நாடு தொழில் எளிதாக்கல் திருத்தச் சட்டம், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் திருத்த சட்டம், தமிழ்நாடு ஊதியம் வழங்குதல் திருத்த சட்டம், தமிழ்நாடு ஊராட்சிகள் இரண்டாம் திருத்தச் சட்டம், தமிழ்நாடு நிதி ஒதுக்கீட்டுச் சட்டம், தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள் விற்பனை ஒழுங்குமுறைப்படுத்துதல் இரண்டாம் திருத்த சட்டம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் திருத்தச் சட்டம், தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி திருத்த சட்டம், தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி இரண்டாம் திருத்தச் சட்டம், தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி இரண்டாம் திருத்தச் சட்டம், எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குதல் உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் ஆளுநர் அர்லேகர் அளித்துள்ளார் .

error: Content is protected !!