7 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சி மாவட்டம் துறையூர் சிக்கதம்பூர் ஏரியில் கோலாகல மீன்பிடித் திருவிழா – ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாக பங்கேற்பு
திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிக்கம்பூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஏரியில்,

கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பாரம்பரிய மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
சிக்கதம்பூர், பாளையம், ஒட்டம்பட்டி, புதூர் மற்றும் சேர்வைக்காரன்பட்டி ஆகிய ஐந்து கிராமங்களுக்கு சொந்தமான இந்த ஏரியில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று மீன்பிடி திருவிழா நடைபெற்றதால் கிராம மக்கள் பெரும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
அதிகாலை முதலே ஏரிக்கரையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் வலை, கூடை, கச்சா, தூண்டில், கொசுவலை,துண்டுவலை உள்ளிட்ட பாரம்பரிய உபகரணங்களைப் பயன்படுத்தி ஆர்வமுடன் மீன் பிடித்தனர். பலருக்கு 5 கிலோ எடையிலானா பெரிய மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது.
கிராம மக்களின் ஒற்றுமையையும், பாரம்பரிய பண்பாட்டையும் வெளிப்படுத்தும் இந்த மீன்பிடித் திருவிழா, 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெற்றதால் ஐந்து கிராம மக்களும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
