Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புகளூாில், பசுமை பூங்காவை திறந்து வைத்தார் VSB

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புகளூர் நகராட்சியில், தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பாக தேசிய ஊரக வளர்ச்சி முகமை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 2 கோடியே 18 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் சாலை மேம்பாடு, மழைநீர் வடிகால் , பசுமை, பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், எழில் நகர் பகுதியில் ரூ.45 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பசுமை பூங்கா திறப்பு விழாவும்   இன்று நடந்தது.    முன்னாள்  அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான  வி செந்தில் பாலாஜி பூங்காவை திறந்து வைத்து,  புதிய பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.தொடர்ந்து புகளூர் நகராட்சியில் ரூ 1கோடியே 83 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்ட அறிவுசார் மையத்தையும் சட்டமன்ற உறுப்பினர் வி செந்தில்பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த நிகழ்ச்சிக்கு  மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமை   தாங்கினார்.  அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.இளங்கோ புகளூ ர் நகர் மன்ற தலைவர் குணசேகரன், ஆணையர் ஹேமலதா மற்றும் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின்  பிரதிநிதிகள், பொதுமக்கள்  திரளாக பங்கேற்றனர்.ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு சென்றபோதும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
error: Content is protected !!