Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2024 ஜூன் மாதம் குரூப் 4 தேர்வு…….ஜனவரியில் தேதி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்வரும் போட்டித் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுதிட்டத்தை வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டு திட்டத்தின் கீழ், எதிர்வரும் 2024ம்  ஆண்டில் நடைபெறவுள்ள துறை சார்ந்த தேர்வுகள் குறித்தும் குரூப்- I, II, IV உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் குறித்தும் விவரங்கள் அடங்கியிருக்கும். மேலும், ஆண்டின் எந்த மாதத்தில் தேர்வு குறித்த அறிவிப்பு (Notification) வெளியாகும், தோராயமான காலியிடங்கள், அதற்கான தேர்வு நடைபெறும் நாள் உள்ளிட்ட விவரங்கள் அறிவிப்பில் இடம்பெறும்.

இந்த நிலையில் நேற்று   மாலை 2024ம் ஆண்டுக்கான  தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.

 

அதில் குரூப்  4 தேர்வு அறிவிப்பு ஜனவரியில் வெளியிடப்படும். குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் நடைபெறும்.   இந்த குரூப் 4 தேர்வைத்தான் லட்சகணக்கான தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதனை 15 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் 1 தேர்வு அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும். குரூப் 1 தேர்வு ஜூலையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!