Skip to content
Home » துப்பாக்கியுடன் மிரட்டலான லுக்கில் லேடி சூப்பர் ஸ்டார்…. ஜவான் போஸ்டர்…

துப்பாக்கியுடன் மிரட்டலான லுக்கில் லேடி சூப்பர் ஸ்டார்…. ஜவான் போஸ்டர்…

  • by Senthil

‘ஜவான்’ படத்தில் நடித்துள்ள நயன்தாராவின் மிரட்டலான போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜவான்‘. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் சஞ்சத் தத் மற்றும் தீபிகா படுகோனே சிறப்பு தோற்றத்தில்  நடித்துள்ளனர். இதுதவிர விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

nayanthara

சுமார் 250 கோடியில் உருவாகும் இப்படத்தை ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் இப்படம் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முன்னோட்ட காட்சி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நயன்தாரா துப்பாக்கியுடன் இருக்கும் மிரட்டடலான போஸ்டர் படக்குழு வெளியிட்டுளளது. இந்த போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!