Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவண்ணாமலை செங்கம் அருகே ரூ.5 லட்சம் குட்கா பறிமுதல்

திருவண்ணாமலை செங்கம் அருகே ரூ.5 லட்சம் குட்கா பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட இந்த போதை பொருட்கள் தொடர்பாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அடுத்தடுத்து வந்த இரண்டு சொகுசு கார்களை போலீசார் மறித்து சோதனை செய்தனர்.

அப்போது காரின் ரகசிய அறைகளில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், இவை அனைத்தும் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக விற்பனைக்காக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் ஆகும். இதையடுத்து கார்களில் இருந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை போலீசார் உடனடியாக கைது செய்து, குட்கா மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!