Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி…. காஷ்மீரிலும் காங் கூட்டணி முந்துகிறது

அரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக 5ம் தேதி தேர்தல் நடந்தது.  இன்று  அங்கு வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில்  காங்கிரஸ் , மா. கம்யூகூட்டணி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் மட்டும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு 57 இடங்களில் முன்னணியில் உள்ளது.  மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தும் வெற்றி பெறும் நிலையில் முன்னேறுகிறார்.  பாஜக 23 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த பாஜக இங்கு  இப்போது ஆட்சியை இழக்கிறது. காங்கிரஸ் மீண்டும் அரியானாவில் அரியணை ஏறுகிறது.

காஷ்மீரில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கும் இன்று 20 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. காங்கிரஸ். தேசிய மாநாட்டு கட்சி  கூட்டணி 45 இடங்களிலும்  பாஜக  29 இடங்களிலும் முன்னணியில் உள்ளது.  சுயேச்சைகள் 12 இடங்களில் முன்னணியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!