திருச்சி கும்பக்குடியில் இருந்து சூரியூர் வழியாக துவாக்குடி சுங்கச்சாவடி சென்றடையும் சாலையில் நேற்று இரவு 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வெளிநாடு செல்வதற்காக காரில் திருச்சி விமான நிலையம் நோக்கி சென்ற நபர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
