குளித்தலை அருகே குமாரமங்கலம் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எம் சாண்ட் ஏற்றுச்சென்ற லாரியும் நெல் மூட்டை ஏற்றி சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு டிரைவர்களும் சம்பவ இடத்தில் பலியானார்கள் இரண்டு டிரைவர்கள் சடலத்தை கைப்பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குமாரமங்கலம் மாவட்ட எல்லையில் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி சேர்ந்த கோபி கிருஷ்ணன் வயது சுமார் 35.
இவர் கரூர் பகுதியில் இருந்து டிப்பர் லாரியில் எம் சென்ட் ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்றார்.
எதிரே திருவாரூர் மாவட்டம் கொள்ளும் மாங்குடி ஜீவா காலனி சேர்ந்த ஜெயபால் மகன் மேகநாதன் வயது 40 நெல் மூட்டைகள் லாரியில் ஏற்றிக்கொண்டு காங்கேயம் சென்றார்.
அப்போது சம்பவ இடத்தில் இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு லாரி டிரைவர்களும் சம்பவ இடத்தில் பலியானார்கள்.
குளித்தலை தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கிய இரண்டு டிரைவர்களின் உடலை கிரேன் உதவியுடன் மீட்டனர். .
குளித்தலை போலீசார் இரண்டு உடல்களையும் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்காக உட்படித்துள்ளனர்.
திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குளித்தலை போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
