Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காரில் நேருக்கு நேர் மோதிய வேன் – டெம்போ 4 பேர் பரிதாப பலி

பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர், இன்று மதியம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு டெம்போ மூலம் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். சுகாலி பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலையில் டெம்போ சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த வேன் மீது எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதி கோர விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் டெம்போவில் பயணித்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!