சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 5, 2026 அன்று சூட்கேஸ் ஒன்றில் தலையில்லாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கு, தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் காவல்துறையின் தீவிர விசாரணையின் மூலம் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.
அமீர் அலி (35), அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் கொலையானவர் ஆவார். இவரை கொலை செய்த 1. ரஹிமா காதுன் (30) – கொலையான அமீர் அலியின் மனைவி (அசாம் மாநிலத்தவர்).
2. அஷ்ரப் அலி (36) – ரஹிமாவின் நண்பர் (அசாம் மாநிலத்தவர்).இவர்களை கைது செய்தனர். பின்னர் விசாரணையில் … குடும்பத் தகராறு மற்றும் சித்திரவதையால் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ரஹிமா காதுன், அசாம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் புற்றுநோய் நோயாளிகளுக்கு தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவிகளை ஏற்பாடு செய்து தரும் புரோக்கராக தேனாம்பேட்டையில் தங்கி வேலை செய்து வந்தார். அவரது கணவர் அமீர் அலி, ரஹிமாவைத் தொடர்ந்து குடித்துவிட்டு வந்து அடித்து, கடுமையான குடும்ப வன்முறையில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், அமீர் அலிக்கு வேறு பெண்களுடன் தவறான தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கொலைத் திட்டம்: கணவனின் கொடுமைகளைத் தாங்க முடியாத ரஹிமா, தனது நண்பரான அஷ்ரப் அலியுடன் இணைந்து கணவனைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.
சம்பவம் நடந்த விபரம்: ஜூன் 2 அன்று, ரஹிமா தனது கணவர் அமீர் அலிக்கு தூக்க மாத்திரைகள் கலந்த பாலைக் கொடுத்துள்ளார். அவர் மயக்கமடைந்ததும், ரஹிமாவும் அஷ்ரப் அலியும் சேர்ந்து அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர்.
உடலைத் துண்டு துண்டாக வீசிய கொடூரம் ..கொலையை மறைப்பதற்காக, சமையலறை கத்தியைப் பயன்படுத்தி உடலைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளனர்.
உடல் முண்டம் : துண்டிக்கப்பட்ட உடல் பகுதியை ஒரு நீல நிற சூட்கேஸில் அடைத்து, ஜூன் 5 அன்று காலையில் பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் வீசிச் சென்றனர்.
கை மற்றும் கால்கள்: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் வீசியுள்ளனர்.
தலைப் பகுதி: பிளாஸ்டிக் கவரில் சுற்றி செங்கல்பட்டு அருகே உள்ள கொளவாய் ஏரியில் வீசியுள்ளனர்.
முக்கியத் தடையம்: சூட்கேஸ் கிடந்த இடத்தின் அருகே மருத்துவக் கழிவுகளைக் கட்டும் (சிவப்பு மற்றும் மஞ்சள் நிற) பிளாஸ்டிக் கவர்கள் கிடந்தன. இதனைத் துப்புத் துலக்கிய ஓட்டேரி மற்றும் சைபர் கிரைம் போலீசார், அந்தப் பைகள் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சொந்தமானவை என்பதைக் கண்டறிந்தனர்.
அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும், ஓலா/உபெர்/ராபிடோ போன்ற பயணப் பதிவுகளையும் ஆராய்ந்ததில், ரஹிமா மற்றும் அஷ்ரப் அலி மாட்டிக்கொண்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பக்கிங்காம் கால்வாயில் இருந்து கை, கால்களும், கொளவாய் ரியில் இருந்து தலைப் பகுதியும் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
