Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவாரூரில் கனமழை- 2000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

திருவாரூரில் கனமழை- 2000 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி சேதம்!

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த கனமழையால், 2,000 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் குருவை நெல் சாகுபடி ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதும், அதனை நம்பி சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் மும்முனை மின்சாரத்தைப் பயன்படுத்தி விவசாயிகள் மிகக் குறைந்த அளவிலேயே சாகுபடி செய்திருந்தனர்.

இந்த குருவை சாகுபடி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தீவிரமாக அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, நன்னிலம் வட்டம் பேரளம் அருகில் உள்ள ராதாநல்லூர், கல்லக்குடி, மேனாங்குடி, பாலூர், செம்பியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தன. கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் பெய்த திடீர் மழை மற்றும் காற்று காரணமாக அந்த நெற்பயிர்கள் முற்றிலுமாக சாய்ந்தன.

தொடர்ந்து பெய்த மழையால் அந்த நெற்பயிர்கள் தற்போது முளைக்கவும் தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை செலவு செய்து, அறுவடைக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் பயிர்கள் சாய்ந்து முளைக்கத் தொடங்கியிருப்பது விவசாயிகளுக்கு பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வேளாண் துறை அதிகாரிகள் உடனடியாகப் அந்தப் பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!