Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் வெளுத்து வாங்கிய கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி

தஞ்சாவூரில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்த நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து வெளுத்து வாங்கிய கனமழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் தாக்கத்தினால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக

தஞ்சாவூரில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கன மழை வெளுத்து வாங்கியது இதனால் நேற்று இரவு வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த பல வாரங்களாக மிகுந்த வெயில் தாக்கத்தால் இரவு நேரத்தில் புழுக்கம் அதிகம் இருந்து வந்த நிலையில் இந்த காற்றால் மக்கள் நிம்மதியாக உறங்கினர்.

error: Content is protected !!