Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிவேக பைக் பயணம்.. மேம்பாலத்தில் இருந்து விழுந்து வாலிபர் பலி

மேம்பாலத்தில் அதிவேக பைக் விபத்து- வாலிபர் பரிதாப பலி

சென்னை எண்ணூர் கத்திவாக்கம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த விபத்தில் மேக சுந்தர் என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஸ்ரீஹரன் என்ற மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேக சுந்தர் மற்றும் ஸ்ரீஹரன் ஆகிய இருவரும் நேர்காணலுக்குத் தேவையான ஷூக்களை வாங்கிக்கொண்டு தங்களது இருசக்கர வாகனத்தில் வேகமாகத் திரும்பிக் கொண்டிருந்தனர். எண்ணூர் கத்திவாக்கம் மேம்பாலத்தில் பைக் அதிவேகமாக வந்தபோது, எதிர்பாராத விதமாக வாகனத்தின் கட்டுப்பாடு இழக்கப்பட்டது. வேகம் அதிகமாக இருந்ததால் மேம்பாலத்தின் தடுப்புச்சுவர் மீது பைக் பலமாக மோதியது. இந்த பயங்கர மோதலின் தாக்கத்தால், மேக சுந்தர் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதில் அவருக்கு ஏற்பட்ட பலத்த காயங்களால் அவர் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். படுகாயமடைந்த ஸ்ரீஹரன் உடனடியாக மீட்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!