அமெரிக்காவின் விமானத்தில் பயணித்த பிரபல ஹாலிவுட் நடிகை செல்மா பிளேயர், நடுவானில் திடீரென கட்டுப்பாடின்றி ரகளையில் ஈடுபட்டுள்ளார். அப்போது தடுக்க வந்த 2 விமான பணிப்பெண்களையும், மருத்துவமனைக்கு சென்றபோது பெண் காவலர் மற்றும் செவிலியர்களையும் தாக்கியதாக அவரை போலீசார் கைது செய்தனர். நரம்பியல் நோய்க்கான மருந்தை உட்கொள்ள தவறியதால் இந்த சம்பவம் அரங்கேறியதாக அவரது தரப்பு விளக்கமளித்த நிலையில், நீதிமன்றம் அவருக்கு ரூ. 19 லட்சம் ஜாமீன் தொகை விதித்து வழக்கினை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளது.
நடுவானில் விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட ஹாலிவுட் நடிகை செல்மா பிளேயர் கைது
