Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருமயம்….. கோட்டை பைரவர் ஆலயத்தில்….. அமித்ஷா சுவாமி தரிசனம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு வருகை புரிந்தார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து நேற்று மதியம் தனி விமானத்தில் புறப்பட்டு, திருச்சி விமான நிலையத்திற்கு பிற்பகல் 3 மணிக்கு வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை அடைந்து அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள பழமை வாய்ந்த ராஜராஜேஸ்வரி சத்தியகிரீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் அமித்ஷா கலந்துகொண்டார். பின்னர் கோட்டை பைரவர் ஆலயத்திற்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். ஆலயத்தின் சார்பில் பூரண கும்பம் மரியாதை கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஆந்திராவுக்கு புறப்பட்டு சென்றார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை .பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா.
தமிழக பாஜக பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!