Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக-வில் இணைகிறார் நடிகர் பாண்டி ரவி-குவியும் ஆதரவு!

Popular Tamil actor Pandi Ravi smiling and posing inside the Tamilaga Vettri Kazhagam party office in Chennai in June 2026.

புதுச்சேரி பாஜக மாநில பிரச்சாரக் பிரிவு அமைப்பாளராக இருந்த நடிகர் பாண்டி ரவி,பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக செய்தியாளர்களிடம் அறிவித்தார்.அவரது இந்த முடிவு புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.தனக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் பாஜகவிலிருந்து விலகுவதாக நடிகர் பாண்டி ரவி பேட்டி.

சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் பரிச்சயமான முகமாக இருக்கும் பாண்டி ரவி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்.கடந்த 39 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியுடன் பயணித்து வந்த அவர், தற்போது கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாண்டி ரவி,”1987-ம் ஆண்டு முதல் என் தந்தையை பின்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியில் பயணித்து வருகிறேன். இன்று சில தவிர்க்க முடியாத காரணங்களால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், எனக்கு வழங்கப்பட்டிருந்த மாநில பிரச்சார பிரிவு பொறுப்பிலிருந்தும் முழுமையாக விலகிக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

“நான் பெருமைக்காக சொல்லவில்லை. ஆனால் என்னுடைய தகுதி, அனுபவம், மக்கள் தொடர்பு ஆகியவற்றை பாரதிய ஜனதா கட்சி சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. பாண்டிச்சேரியில் 10 லட்சம் பேர் இருந்தால் அதில் 7 முதல் 8 லட்சம் பேருக்கு என்னை தெரியும். நான் எந்த பதவியையும் எதிர்பார்த்து கட்சியில் இருக்கவில்லை. ஆனால் என்னால் இன்னும் நிறைய செய்ய முடியும் என்ற எண்ணம் இருந்தது. அதற்கான வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

“எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை முழு அர்ப்பணிப்புடன் செய்தேன். தேர்தல் பிரச்சாரங்களில் கடுமையாக உழைத்தேன். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு கட்சிக்காக இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்கான வழிகள் இல்லாதது என்னை ஏமாற்றமடைய வைத்தது” என்றார்.

📍 சென்னை, ஜூன் 13, 2026 — ETamilNews நிருபர்.

error: Content is protected !!