தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி காலத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள், கடைசி நேரத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். பண்டிகை காலத்தில் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், பயணிகள் முன்பதிவு தேதியை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை.. ரயில் டிக்கெட் முன்பதிவு செப்.6 முதல் தொடக்கம்
