Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மூதாட்டியிடம் நகை திருட்டு-பணம் பறிப்பு- திருச்சி க்ரைம்

Trichy crime branch police officers investigating an official residence after a knife-point robbery involving an elderly woman on June 12 2026.

மூதாட்டியிடம் நகை திருட்டு ..மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

திருச்சி கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராணி ( வயது60 ) . இவர் கடந்த மே.17 ந் தேதி
தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பஸ்சில் ஏறி கடைக்குச் சென்றார். பின்னர் தெப்பக்குளம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திலிருந்து இறங்கி, கடைக்கு வந்தபோது, ​​தனது பணப்பையில் இருந்து 2 அரை பவுன் தங்க செயின் மாயமானது. இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (34) இவர் காந்திமார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளி . இவர் நேற்று கல்லான்குத்து பகுதி வழியாகத் தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, ​​ அந்தவழியாக வந்த நபர் வழிமறித்து மது அருந்துவதற்காகப் பணம் கேட்டார். ஆனால் பணம் தர மறுக்கவே
கத்தியைக் காட்டி மிரட்டி அவரது சட்டைப் பையிலிருந்து ரூ.950 பணத்தைப் பற்றிச் சென்றார். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதித்து திருச்சி அம்பிகாபுரம் அண்ணா நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்த ரவுடி இளவரசன் (வயது28)என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ 350 பணம் மற்றும் அரிவாளை பறிமுதல் செய்தனர்.

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

புதிதாக வாடகை வீட்டிற்கு சென்ற போது விபரிதம்

திருச்சி தென்னூர் ஒத்த கோபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஜாபர்அலி கான் (வயது51) இவருக்கு அமீர்கான்,சர்தார்கான் என 2 மகன்கள் உள்ளனர்.இவரது மகன் அமீர் கானுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து உள்ளது,இந்நிலையில் இவரது மகனுக்கு ஜீவா நகர் காமராஜர் தெருவில் வீடு பார்த்துள்ளார். அந்த வீட்டிற்கு குடிபோக பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது நேற்று நள்ளிரவு கயிற்றில் கட்டி பீரோவை பால்கனியில் தூக்கியபோது, துரதிர்ஷ்டவசமாக அந்த பீரோ கம்பத்தில் பட்டதில், சர்தார் கான் (வயது 21) என்பவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில்

போதை மாத்திரை விற்பனை செய்த 2 பேர் கைது

திருச்சி,ஜூன். 12

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் நேற்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது காந்தி மார்க்கெட் தர்பார் மேடு அருகே போதை மாத்திரை விற்ற எடத்தெரு பிள்ளைமாநகரைச் சேர்ந்த சிவா(19)
என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று திருச்சி பாலக்கரை பெல்ஸ் கிரவுன்ட் அருகே போதை மாத்திரை விற்ற சூர்யா(24) என்பவரை கைது செய்து அவர்களிடமிருந்த 18 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

லாட்டரி விற்றவர் கைது

திருச்சி மேலப்புதுார் பகுதியில் லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது மேலப்புதுார் ஆலயம் அருகே லாட்டரி விற்ற தென்னுார் காஜாதோப்பு பகுதியைச் சேர்ந்த காஜாமொய்தின் (வயது57) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து லாட்டரி, ரூ.29 ஆயிரத்து,820 பணம் மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர்.

திருச்சி, ஜூன் 12, 2026 — ETamilNews நிருபர்

error: Content is protected !!