Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மனைவியைக் கொன்று இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட கணவன் – பஞ்சாப்பில் அதிர்ச்சி

பஞ்சாப் மாநிலம் சங்கூர் மாவடம் லெரகாங் கிராமத்தை சேர்ந்தவர் குல்தீப். இவரது மனைவி கர்கிடன் கவுர். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் ஒரு மகன் என மொத்தம் 3 பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், குல்தீப்பிற்கும் அவரது மனைவிக்கும் இடையே நேற்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த குல்தீப் வீட்டில் இருந்த கோடாரியால் மனைவி கர்கிடன் கவுரை சரமாரியாக வெட்டிக்கொன்றார். மேலும், மனைவியை கொலை செய்வதை அவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பின்னர், அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்ற குல்தீப் மனைவியை கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்தார். இதையடுத்து, குல்தீப்பை கைது செய்து சிறையில் அடைந்த போலீசார், வீட்டில் சடலமாக கிடந்த கர்கிடன் கவுரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலைக்கான காரணம் குறித்து குல்தீப்பிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!