மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் 33 வயதான ஏக்தா பங்காட், தனது 6 வயது மகன் மாதவுடன் அடுக்குமாடி குடியிருப்பின் 18வது மாடியில் இருந்து கீழே குதித்ததில் இருவரும் உயிரிழந்தனர். நீண்டகாலமாக முதுகுத்தண்டு தொடர்பான உடல்நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படும் ஏக்தா, 7 முதல் 8 பக்கங்கள் கொண்ட கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், தனது மறைவுக்குப் பிறகு கணவர் மறுமணம் செய்து வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கணவர் மறுமணம் செய்துகொள்ள வேண்டும்’.. மகனுடன் மனைவி தற்கொலை
