Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உங்கள் பிரார்த்தனையால் நலமாக இருக்கிறேன்…. மயிலாடுதுறை கலெக்டர்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இதயக் குழாயில் ஏற்பட்டிருந்த 3 அடைப்புகளின் காரணமாக  சென்னை மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு  நேற்று  காலை மயிலாடுதுறை திரும்பினார்.   மாவட்ட ஆட்சியர் ஓய்வு ஏதும் எடுக்காமல்  உடனே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று மனுக்களை பெற்றார். அப்போது  சிலர் கலெக்டரிடம் நீங்கள்நலமாக இருக்கிறீர்களா  என கலெக்டரிடம் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த கலெக்டர், உங்கள் பிரார்த்தனைதான் என்னைக் காப்பாற்றியது. நான் இப்போது நலமாக உள்ளேன். உங்கள் அனைவருக்கும் நன்றி என  கூறினர்.

சிகிச்சை முடிந்து ஊர் திரும்பிய நாளன்றே மாவட்ட ஆட்சியர்  மக்கள் குறைகேட்ட சம்பவம் மனு கொடுக்க வந்த மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!