Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நான் ரெடி-நீங்க ரெடியா?… திருச்சியில் எம்பி துரை வைகோ சவால்

நான் ரெடி-நீங்க ரெடியா?... திருச்சியில் எம்பி துரை வைகோ சவால்

திருச்சி விமான நிலையத்தில் எம்.பி துரை வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

நான் வெற்றி பெற்றதற்கு திமுக தான் காரணம் என்று சொல்வது பொய்.
நான் வெற்றி பெற்றதற்கு திமுகவின் பங்கு அதிகமாக உள்ளது.அதே போன்று கூட்டணி கட்சியின் பங்கும் உள்ளது.
திமுக 40 தொகுதிகளிலும் ராஜினாமா செய்ய தயாரா? அப்படி செய்தால் நானும் ராஜினாமா செய்ய தயார்.
தில்லு, தைரியம் இருந்தால் திமுக தலைமை இன்று அறிவிக்கட்டும்..நான் ராஜினாமா செய்ய தயார். மீண்டும் தேர்தலை சந்தித்தால் 40-ம் போய்விடும்.
விஜய் அரசு எம்.எல்.ஏக்களை களவாட வேண்டிய அவசியம் கிடையாது. அவர்கள் வாக்குகளை களவாடினார்களா ?
பல கோடி செலவு செய்தும் திமுக, அதிமுகவால் வெல்ல முடியவில்லை.
திமுக – அதிமுக கூட்டணி வைக்க முயற்சி செய்ததால் தான் எம்.எல்.ஏக்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்தார்கள். மதிமுக எம்.எல்.ஏக்களும் விலை போய் விட்டார்கள்.
திமுக ஒரு பவர் சென்டர் ரை கையில் வைத்து உள்ளது. திமுக, அதிமுக தலைமையின் மீது நம்பிக்கை இல்லாததால் அந்த கட்சியிலிருந்து வெளியேறுகிறார்கள். இவ்வாறு துரை வைகோ எம்பி கூறினார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர்கள்வெல்லமண்டி சோமு,மணவை தமிழ் மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!