திருமணத்திற்கு முன்பு தனக்கென சொந்தமாக வீடு எதுவும் இல்லை என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய அவர், கௌரியை திருமணம் செய்த பிறகுதான் சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகத் தொடங்கியதாகக் கூறினார். முதலில் வாங்கிய வீடும், பின்னர் வாங்கிய ‘மன்னத்’ பங்களாவும் தங்களது பொருளாதார வசதிக்கு அப்பாற்பட்டதாக இருந்ததாகத் தெரிவித்தார். வாழ்க்கையில் கடினமான தருணங்களில் சொந்த வீட்டிற்குத் திரும்பும்போது மனநிம்மதி கிடைப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
திருமணத்திற்கு முன்பு எனக்கென சொந்த வீடு கூட இல்லை”.. நடிகர் ஷாருக்கான்
