Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எல்லா விஷயத்துக்கும் கைது செய்வதில் உடன்பாடில்லை – கார்த்தி சிதம்பரம்!

எல்லா விஷயத்துக்கும் கைது செய்வதில் உடன்பாடில்லை

எல்லா விஷயத்துக்கும் கைது செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என காங். எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய காங். எம்.பி. கார்த்தி சிதம்பரம், “எல்லா விஷயத்திற்கும் கைது செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நமது நீதித்துறை அமைப்பில் தேவையில்லாமல் கைது நடக்கிறது. ஒருவர், இன்னொருவருக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் அல்லது சாட்சியை கலைப்பார்கள் என நினைத்தால் கைது செய்யலாம். அவர் வெளியே இருப்பதால், இன்னொருவரின் உயிருக்கோ, உடமைக்கோ ஆபத்து இல்லை என காவல்துறை நினைத்தால் கைது செய்ய வேண்டாம். பெரும்பாலான வழக்குகளில் கைது செய்யாமலேயே விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் தண்டனை வாங்கித் தரலாம்

பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய தவெக MLA அருள் விக்னேஷை கைது செய்ய தேவையில்லை, மாவட்ட ஆட்சியர் ஏன் காலதாமதமாக புகார் அளித்தார் என்பதை விசாரிக்க வேண்டும். தலைமைச் செயலாளர் இதில் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்கலாம்” என்றார்.

error: Content is protected !!
Secret Link