Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“தவெகவை நானே தவறாகதான் கணித்தேன்… மக்கள் தெளிவாக வாக்களிப்பு- கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் செய்தது தவறு, திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை என கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டியளித்துள்ளார்.

மதுரையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாலர்களிடம் பேசிய எம்பி கார்த்திக் சிதம்பரம், “காங்கிரசு முதுகில் குத்தியதாக சொல்லியது தேவையற்ற விமர்சனம்.  தேர்தலுக்கு முன்னரே திமுக கூட்டணி வேண்டாம் என சிலர் சொன்னார்கள். தன்னிச்சையாக காங்கிரசு இந்த முடிவை எடுக்கவில்லை. தேர்தலை முழு மனதோடு தான் திமுகவுடன் சந்தித்தோம். தேர்தல் முடிவுகள் சாதகமாக வராததால் தான் நாங்கள் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தோம். கூட்டணி ஆதரவோடு தான் விஜய் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே மக்கள் தீர்ப்பு. திமுக ஆரோக்கியமான அரசியல் கட்சியாக தான் வருங்காலத்திலும் இருக்கும். திமுக தலைவர் மீது எனக்கு அதே மதிப்பு உண்டு. திமுகவின் முதுகில் குத்தியதாக சொல்வது பொருத்தமானது அல்ல. திமுக ஆட்சி அமைக்கும் நிலையில் இருந்து இதை நாங்கள் செய்திருந்தால் சொல்லலாம். 

திமுகவிடமிருந்து பரஸ்பரமாக பிரிந்திருக்கலாம். ஆனால், திமுகவுக்கு எந்த வாய்ப்பையும் காங்கிரசு மறுக்கவில்லை. திமுகவை விட்டு பிரிந்த விவகாரத்தில் காங்கிரசு செய்தது தவறு தான். தமிழ்நாட்டில் திமுகவை அழிக்க முடியாது. அவர்களுக்கு எதிர்காலம் இருக்கிறது. விசிக, கம்யூனிஸ்ட் போல காங்கிரசும் செய்திருக்கலாம். தவெக பிரதான அரசியல் கட்சியாக இருக்கும். திமுகவும் பிரதான கட்சியாக இருக்கும். திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை. அதிமுக, பாஜகவுக்கு தான் இந்த தேர்தலில் கடுமையான பாதிப்பு. அதிமுக இப்போது 3வது கட்சியாக மாறிவிட்டது. அதிமுக இனி ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை மக்களிடம் இல்லை. மதுபான கடைகளை மூடுவது எல்லா அரசுகளும் செய்வது தான். அது புதிய முடிவுகள் அல்ல. செங்கோட்டையனை தவிர யாருக்கும் அங்கு அனுபவமில்லை. கொஞ்ச நாட்களுக்கு பின்னரே தவெக அரசை பற்றிய விமர்சனத்தை சொல்ல முடியும். 5 ஆண்டுகளுக்கு தவெக ஆட்சி எந்த இடையூறும் இல்லாமல் தொடரும். தவெகவை குறைத்து மதிப்பிடவில்லை, நானே தவறாகதான் கணித்தேன். தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள்… மதச்சார்பற்ற ஆட்சியை தமிழகத்தில் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே விஜய் மதச்சார்பற்ற சக்திகளின் ஆதரவை பெற்றுள்ளார். மரியாதை நிமித்தமாக விஜய் அனைவரையும் சந்தித்தார். அவர் ஏன் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை என்பது பற்றி நான் ஏதும் சொல்ல முடியாது” என்றார். 

error: Content is protected !!