தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், “உங்க அப்பாவை (திமுகவை) காணோம்” என்ற அர்த்தத்தில் முதல்-அமைச்சர் விஜய் ஒரு குட்டிக்கதையைச் சொல்லியிருந்தார். இதற்குத் திருவாரூர் திருமண விழா ஒன்றில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் பேசுகையில், “நான் சட்டமன்றத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறேன். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற மக்கள் நலத்திட்டக் கோப்புகளில் மு.க.ஸ்டாலின் என்ற கையெழுத்து என்றும் இருக்கும். அந்தத் திட்டங்கள் இருக்கும் வரை நான்தான் முதல்-அமைச்சர். நான் 60 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றி வருகிறேன்” என்று குறிப்பிட்டார். மேலும், தற்போதைய தவெக ஆட்சியில் மின்வெட்டு மற்றும் விவசாயிகளுக்குத் தண்ணீர் திறக்காத பிரச்சினைகள் உள்ளதாகச் சாடிய அவர், “திமுக கூட்டணியில் இருந்து பிற கட்சிகள் தாங்களாகவே வெளியேறுகின்றன; கூட்டணியே வேண்டாம் என திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர், அதை விரைவில் பரிசீலிப்போம்” எனப் பரபரப்பாகப் பேசியுள்ளார்.
