Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொளுத்தும் வெயில்-டிரைவர்-கண்டக்டர்களுக்கு ஐஸ்-ஜூஸ்.. நெகிழ்ச்சி

என்னங்க வெயிலு, தஞ்சாவூர்ல சும்மா நெருப்பா அள்ளி கொட்டுது, மனுஷன் வெளியவே தலை காட்ட முடியல! இத சமாளிக்க நம்ம ஊரு மக்கள் மோர், நுங்கு, இளநீருன்னு எதையாவது குடிச்சுட்டு, மதிய நேரத்துல அப்படியே நிழல்ல ஒதுங்கி காலத்த ஓட்டுறாங்க .

ஆனா இந்த வெயில்ல நம்ம டிரைவர், கண்டக்டர் அண்ணன்மார்களுக்கு தான் செம கஷ்டம்; ஒரு பக்கம் வண்டி இன்ஜின் சூடு, இன்னொரு பக்கம் பஸ்ஸுல ஜனங்க கூட்டத்துல வர்ற புழுக்கம்னு

மனுஷன் வேர்த்து விறுவிறுத்து போயிடுறாங்க. தாகத்துக்கு தண்ணி குடிக்க கூட வழியில்லாம, அந்த அனல் காத்துலயே வண்டி ஓட்டிட்டு , டிக்கெட் போடுறது எல்லாம் சாதாரண விஷயம் இல்ல !

இந்த வெயில்ல வேர்த்து விறுவிறுத்து உடம்பு சூடாகி, கண்ணெல்லாம் எரியுறதோட, அந்த புழுக்கத்துலயே வேலை பாக்குறதால மனசுக்கும் செம கடுப்பாகிடுது. நிம்மதியா ஒரு இடத்துல

உட்கார முடியாம, உடல் வலியோடயும் மனசுல ஏகப்பட்ட டென்ஷனோடயும் தான் அவங்க ஒவ்வொரு ட்ரிப்பையும் ஓட்டுறாங்க !

அந்த அனல் வெயில்ல கஷ்டப்படுற நம்ம டிரைவர், கண்டக்டர் அண்ணன்மார்களை ஒரு குழுவினர் தேடித் தேடிப் போய் மோர், ஜூஸ், ஐஸ்க்ரீம், பசிக்கு பன், பிஸ்கட், வாழைப்பழம்னு தினமும் அன்போட செஞ்சிட்டு வர்றாங்க . ஜோதி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் தான் இதை பண்ணிட்டு வர்றாங்க . இது பற்றி அவுங்க என்ன சொல்றாங்கன்னா இது ஒன்னும் நேத்து இன்னைக்கு ஆரம்பிச்சது இல்ல, போன ஆறு வருஷமா சூப்பரா பண்ணோம், இப்போ இது வெற்றிகரமா ஏழாவது வருஷம்! இந்த மார்ச் மாசத்துல இருந்தே வேலைய ஆரம்பிச்சுட்டோம், மே மாசம் கத்திரி வெயில் முடியுற வரைக்கும் ஒரு நாள் விடாம இது தொடருவோம்ன்னும் சொல்லியிருக்காங்க . வெயில்ல வெந்து போய் வர்ற டிரைவர் கண்டக்டர் முகத்துல பாக்குற அந்த சின்ன சிரிப்பு தான் நமக்கான உண்மையான சந்தோஷம்ன்னும் சொல்லியிருக்காங்க !

கலைக்கும் கலாச்சாரத்துக்கும் மட்டுமில்ல, பாசத்துக்கும் உபசரிப்புக்கும் பேர்போன ஊரு நம்ம தஞ்சாவூர்! தமிழ்நாட்டுலயே முதல் முறையா நம்ம ஊர்லதான் வெயில்ல வாடுற பஸ் டிரைவர், கண்டக்டர் அண்ணன்மார்களுக்காக தேடித் தேடிப்போய் தினமும் மோர், ஜூஸ், ஐஸ்க்ரீம், பன் ,

வாழைப்பழம்ன்னு தந்து அசத்துறாங்க . தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரம் எவ்வளவு பெருசோ, அதே மாதிரி நம்ம ஊரு மனுஷங்க மனசும் பெருசுதான்னு இத செஞ்சு நிரூபிச்சிட்டாங்க . வெயில் நேரத்துல அவங்க தாகம் தீர்க்குறதுல கிடைக்கிற அந்த நிம்மதியே தனி தான்!

சென்னை , சிதம்பரம் , கும்பகோணம் , அரியலூர்ன்னு தஞ்சாவூர் வழியா போற லாங் ரூட் பஸ் டிரைவர், கண்டக்டர் அண்ணன்மார்களுக்கு ஒரு பைல மோர், ஜூஸ், ஐஸ்க்ரீம், பன்னு, பிஸ்கட், வாழைப்பழம்னு எல்லாம் அடுக்கி வெச்சுக் குடுக்குறாங்க . ‘வெயிலுக்கு தாகமும் தீருது, மதிய நேரத்துல பசியும் ஆறுது, உங்க புண்ணியத்துல தான் இதெல்லாம் கிடைக்குது’ன்னு அந்த அண்ணன்மார்கள் மனசார வாழ்த்துறாங்க. . நீண்ட தூரம் ஓட்டிட்டு வர்றவங்களுக்கு இது ஒரு பெரிய தெம்பா இருக்குதுன்னு அவங்க சொல்லும் போது அவ்ளோ சந்தோஷமா இருக்கு . ஊரு பாசத்தை அந்த ஒரு பையில போட்டு குடுக்குறதுல அவங்க முகத்துல வர்ற அந்த நிம்மதியே தனி தான்!

பஸ் டிரைவர், கண்டக்டர் அண்ணன்மார்களை இந்த வெயில்ல வண்டிய விட்டு ஒரு அடி கூட கீழ இறங்கி அலைய விடாம, பஸ்ஸுக்குள்ள ஏறி அவங்க சீட்டுக்கே தேடிப் போய் கையில குடுக்குறாங்க ஜோதி அறக்கட்டளை பணியாளர்கள் ; ஏன்னா, தேடி வந்து உபசரிக்கிறது தான் நம்ம தஞ்சாவூர் மண்ணோட உண்மையான பாசம்!

வெயில்ல வாடுறவங்களுக்கு ஒரு சொட்டுத் தண்ணி குடுக்குறதே பெரிய புண்ணியம், ஆனா அவங்களைத் தேடித் தேடிப் போய் இவ்வளவு செய்றது நிஜமாவே வேற லெவல்!

தமிழ்நாட்டுக்கே தஞ்சாவூரை ஒரு முன்னுதாரணமா மாத்தி, ஏழாவது வருஷமா இந்தச் சேவையைத் தொடர்ந்து செஞ்சுட்டு வர்ற ஜோதி அறக்கட்டளைக்கு மனமார்ந்த வாழ்த்துகள். டிரைவர் கண்டக்டர் அண்ணன்மார்களை அலைய விடாம, அவங்க சீட்டுக்கே போய் கவனிக்குற அந்த அன்பும் நேர்மையும் நம்மை ரொம்பவே நெகிழ வைக்குது .

error: Content is protected !!