இரண்டு இடைத்தேர்தலிலும் அதிமுக தோல்வியடைந்துள்ளது.இது ஒரு மோசமான தோல்வி என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டியளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், “ அதிமுகவில் நான் அதிருப்தியில் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இபிஎஸ் உடன் கருத்து வேறுபாடு இருப்பது தெரிந்த விஷயம்தானே! இதில் எதுவும் புதிய செய்தி இல்லை. இரண்டு இடைத்தேர்தலிலும் அதிமுக தோல்வியடைந்துள்ளது இடைத்தேர்தலில் அதிமுக மோசமான தோல்வி அடைந்துள்ளது. தோல்விக்கான காரணத்தை கலந்து ஆலோசித்து சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதிமுக தொண்டர்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும். தொண்டர்களுக்கு நம்பிக்கை கொடுத்தால் கட்சியை மீட்டு எடுக்கலாம். அதிமுக தலைமை அனைவரையும் அரவணைக்க வேண்டும். அனைவரையும் அரவணைத்தால் மீண்டும் எம்.ஜி.ஆர். அம்மா ஆட்சியை கொண்டுவர முடியும். எல்லோரையும் ஒருங்கிணைத்தால் அ.தி.மு.க மீண்டு வரும்,இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்பது உண்மை தான் இது ஒரு நல்ல மாற்றம்” என்றார்.
