அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலால் ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் உலகளவில் எரிபொருள் பற்றாக்குறையும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ள சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்துகளுக்கு ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரான் தனது எரிபொருளை விற்க முடியாவிட்டால் அப்பகுதியில் வேறு எந்த நாடும் எரிபொருளை விற்க முடியாது என்றும், ஈரானின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாதவரை எந்தவொரு கட்டமைப்புக்கும் பாதுகாப்பு இருக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நாங்கள் எரிபொருள் விற்க முடியாவிட்டால் யாரும் விற்க முடியாது” – ஈரான்
