Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் செயல்படும் மாயூரம் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர் வழக்கறிஞர் சஷங்கமித்திரன் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார் கவுன்சிலில் புகார் அளித்ததை கண்டித்து மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க தலைவர்கள் கலைஞர் மற்றும் வேலு குபேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், இரண்டு சங்கங்களைச்

சேர்ந்த வழக்கறிஞர்கள் 50 க்கு மேற்பட்டோர் நீதிமன்றம் முன்பு கூடி கோரிக்கையை வலியுறுத்தி கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற முத்திரை கட்டணம் உயர்த்தப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது

error: Content is protected !!