Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஒரே நாளில் 3 அடி உயர்வு

திருப்பூர்: உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது.

அமராவதி அணையின் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் மட்டும் சுமார் 25,250 ஏக்கர் நிலங்கள் பயன்பாட்டில் உள்ளன. அமராவதி ஆற்றின் மூலம் வழி நடுவிலும் உள்ள கிராமங்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நூற்றுக்கணக்கான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அமராவதி அணையின் நீர் இருப்பு தொடர்ந்து சரிந்து வந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்தனர்.

இந்த நிலையில் அமராவதி அணையின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர் இருப்பு மொத்தமுள்ள 90 அடியில் 37.60 அடியாக இருந்தது. அணையின் நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1490 கன அடியாக உள்ளது. அழகின் நீர்மட்டம் ஒரே நாளில் மூன்று அடிக்கு மேல் உயர்ந்து முத்தம் உள்ள 90 அடியில் 40.85 அடியாக உள்ளது.கருகும் பயிர்களைக் காப்பாற்ற உயிர்த் தண்ணீர் கூட கிடைக்காமல் தவித்து வந்த விவசாயிகளுக்கு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவது மகிழ்ச்சி அளித்துள்ளது.

அமராவதி அணையின் நீர் இருப்பு போதிய அளவில் இல்லாததால் ஆயக்கட்டும் பகுதிகளில் குருவை நெல் சாகுபடி விவசாயிகள் முழுவதுமாக கைவிட்டனர்.இந்த நிலையில் அணையின் நீர் இருப்பு உயரத் தொடங்கியுள்ளதால், சம்பா நெல் சாகுபடி விவசாயிகள் தயாராகி வருகின்றனர். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் நீர்வரத்தை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

error: Content is protected !!