Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“வெனிசுலாவுக்கு உதவ இந்தியா தயார்” – பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் உருக்கமான இரங்கல்

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.1 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் மொரோன் மற்றும் தலைநகர் காரகாஸ் ஆகிய நகரங்கள் நிலைகுலைந்துள்ளன. இந்த ஒரு நூற்றாண்டின் மிக மோசமான நிலநடுக்கத்தால் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டுப் பொறுப்பு ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நாடு முழுவதும் தற்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சோக சம்பவத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், வெனிசுலா நிலநடுக்கப் பாதிப்புகள் வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய மக்கள் சார்பாக ஆறுதல் கூறியுள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் நலம் பெற வேண்டுவதோடு, இக்கட்டான இச்சூழ்நிலையில் வெனிசுலாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளதாகவும் உறுதி அளித்துள்ளார்.

error: Content is protected !!