புகழ் பெற்ற இந்திய புகைப்பட கலைஞர் ரகுராய்யின் மறைவு இந்திய கலை உலகிற்கு ஈடுசெய்யமுடியாத ஓர் பேரிழப்பாகும். 1942ல் அப்போதைய பஞ்சாப் மாகாணத்தில் பிறந்த ரகுராய். இந்தியாவின் நவீன வரலாற்றை புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தியவர், “இந்தியாவின் ஆன்மாவை புகைப்படங்களில் வெளிக்கொணர்பவர்” என அறியப்பட்டவர்.
1984ல் நிகழ்ந்த போபால் நச்சுவாயு துயரத்தின் போது இவர் எடுத்த புகைப்படங்கள் அந்த அவலத்தை உலகிற்கு உரைக்கும் படி செய்தார். அன்னை தெரசா மற்றும் இந்திரா காந்தியின் வாழ்கை தருணங்களை இவர் ஆவணப்படுத்திய விதம் காலத்தால் அழியாதவை. இந்திய வாழ்வியலை அதன் எதார்த்ததோடு வரலாற்று சாட்சியாக படம் பிடித்தவர் ரகுராய்.
இந்தியா டுடே இதழின் புகைப்படப் பதிப்பாசிரியராக 1982 முதல் 1992 வரை பணியாற்றினார், மேலும் உலகம் முழுவதும் பல புகைப்படக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.வண்ண புகைப்படங்களை விட கருப்பு வெள்ளை படங்களில் அதிக ஆழம் இருக்கும் என நம்பியவர். ஒளியையும் நிழலையும் அவர் கையாண்ட விதம் ஒரு ஓவியத்தைப்போலவே உயிர்ப்புடன் இருக்கும்.
