கரூர் கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கரூர் பாஜக வடக்கு மாநகர செயலாளர் வடிவேல் தலைமையில் யோகாசன பயிற்சி நடைபெற்றது. இதில் பத்மாசனம், சிரசாசனம், புஜங்காசனம், உள்ளிட்ட பல்வேறு ஆசனங்கள் செய்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சர்வதேச யோகா தினம்…. கரூர் பாஜகவினர் யோகாசனம்
