பாஜக முன்னாள் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தத்தின் மீது பாலியல் புகார் அளித்த திவ்யா பேட்டி :
கருப்பு முருகானந்தத்தின் மீது புகார் அளித்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவருக்கு உயர் நீதிமன்றம் முன் ஜாமினையும் மறுத்தது. 40 நாட்களுக்கும் மேலாக அவரை போலீசார் கைது செய்யவில்லை. தற்போது உச்ச நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமின் வழங்கி உள்ளது. உயர் நீதிமன்றம் முன் ஜாமினை மறுத்தும் அவர் கைது செய்யப்படாததற்கு காரணம் பாஜகவில் உள்ள முக்கிய புள்ளிகள் தான் அவர் பாஜக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட போதும் பாஜகவை சேர்ந்த பலர் அவருக்கு ஆதரவாக இன்றும் உள்ளனர். என்னை ஏமாற்றிய கருப்பு முருகானந்தத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
